திருப்பரங்குன்றம் மலையில் தொழுகைக்கு சென்றவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம்
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை பகுதியில் அமைந்துள்ள தர்காவிற்கு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகைக்காக சென்றனர்.
மலைக்கு மேலே செல்லும் முன், பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, அடிவாரத்தில் பணியில் இருந்த போலீசார், வழக்கம்போல் வருகையாளர்களின் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்ய முயன்றனர்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, “ஒவ்வொரு ஆண்டும் அமைதியாக தொழுகை நடத்தி வருகிறோம். ரம்ஜான் போன்ற முக்கிய நாளில் தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலளித்த போலீஸ் அதிகாரிகள், இது புதிய நடைமுறை அல்ல, வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கையே என விளக்கம் அளித்தனர். பின்னர், அனைவரின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மலைமேல் சென்று நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்