உடனடி செய்தி

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அமைச்சர் பேச்சுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம் | பள்ளி உத்தரவு திரும்பப் பெற கோரிக்கை

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அமைச்சர் பேச்சுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம் | பள்ளி உத்தரவு திரும்பப் பெற கோரிக்கை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி அமைச்சர் நிர்மல்குமார் பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற நிலையில், பழைய நடைமுறையையே தொடர்வோம் என அமைச்சர் கூறியது ஏற்க முடியாதது என்றார். மேலும், பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி மற்றும் மத அடையாளங்களுடன் வரக்கூடாது என்ற உத்தரவை விமர்சித்த அவர், திருநீறு, குங்குமம் அணிவதும், கைகளில் கயிறு கட்டுவதும் தமிழர் பண்பாட்டின் ஒரு பகுதியாகும்; அவற்றை மத அடையாளமாகக் கருதுவது தவறு என்றார். சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் உயர்த்தும் முயற்சியும் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் எனக் கூறிய அவர், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்