உடனடி செய்தி

திருவள்ளூரில் குவாரி பெயரில் 40 அடி ஆழம் வரை சட்டவிரோத மணல் அகழ்வு: விவசாயிகள் அதிர்ச்சி

திருவள்ளூரில் குவாரி பெயரில் 40 அடி ஆழம் வரை சட்டவிரோத மணல் அகழ்வு: விவசாயிகள் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட காவேரிராஜபுரம் கிராமத்தில், குவாரி அனுமதியை தவறாக பயன்படுத்தி பெரும் அளவில் மண் கொள்ளை நடைபெற்றுள்ளது. சுமார் 1.47 ஏக்கர் தரிசு நிலத்திற்கு கிராவல் குவாரி அனுமதி பெற்ற ஒரு அரசியல் பிரமுகர், அதனைத் தாண்டி அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் விவசாய நிலங்கள் உட்பட சுமார் 14 ஏக்கர் பரப்பை ஆக்கிரமித்து, சட்டத்திற்கு மீறாக 40 அடி ஆழம் வரை அகழ்வு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விதிமுறைகளின்படி, 3 மீட்டர் (சுமார் 10 அடி) ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க அனுமதி உள்ளது. ஆனால், கனரக இயந்திரங்களின் உதவியுடன் மிக அதிக ஆழத்தில் அகழ்வு செய்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மணல் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட நிர்வாகம், கனிமவள துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு கிராம மக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் குவாரி பகுதியை பார்வையிட்டபோது, விவசாய நிலங்கள் பெரும் பள்ளங்களாக மாறியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், 500 ஏக்கர் பரப்பில் நடைபெறும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள்மீது உடனடி நடவடிக்கை எடுத்து, விவசாய நிலங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்