தூத்துக்குடி அருகே அரசு பஸ் தீப்பற்றி எரிந்தது – 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வாகைகுளம் அருகே நடைபெற்றது. பயணத்தின் போது பஸ்ஸில் திடீரென புகை எழுந்து, பின்னர் தீ வேகமாக பரவியது. இதை கவனித்த பயணிகள் உடனடியாக சுதாரித்து, அலறியபடி பஸ்ஸிலிருந்து வெளியேறினர்.
இதனால், பஸ்ஸில் இருந்த 60 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் கிடைத்தவுடன் சிப்காட் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
பேருந்தில் தீப்பற்றியதற்கான சரியான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்