உடனடி செய்தி

துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்

துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
கேரள முதல்வர் சதீசன், நேற்று காலை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். முதல்வராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக இந்த கோவிலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணியளவில் கோவிலுக்கு வந்த முதல்வர் சதீசனை, குருவாயூர் தேவஸ்வம் தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாக அதிகாரி அருண்குமார் முறைப்படி வரவேற்றனர். மூலவரை வழிபட்ட பிறகு, தன் உடல் எடைக்கு நிகராக வெண்ணெய் வழங்கும் ‘துலாபார நேர்த்திக்கடன்’ செலுத்தினார். இதற்காக 71 கிலோ வெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதீசன், முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக குருவாயூர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது அரசியல் மற்றும் பக்தர்கள் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தரிசனத்தை முடித்த அவர், கேரள வருவாய் துறை அமைச்சர் அனில் குமார் மகன் திருமண விழாவிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்திகள்

வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
7 மணி நேரங்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
7 மணி நேரங்கள் முன்பு
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
7 மணி நேரங்கள் முன்பு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்