செய்திகள்
⚡ உடனடி செய்தி
வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளிய கள்ளழகர் – கோவிந்தா கோஷத்தில் முழங்கிய மதுரை
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று (மே 1) அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. காலை 5.50 மணியளவில் பச்சை பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
இதனை முன்னிட்டு, ஏப்ரல் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா தினமும் கோலாகலமாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், கள்ளழகர் வைபவம் இன்று நடைபெற்றது.
ஏப்ரல் 29 ஆம் தேதி அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட கள்ளழகர், நேற்று மூன்றுமாவடியில் எதிர்சேவையை ஏற்றார். இன்று அதிகாலை கருப்பணசுவாமி கோயில் முன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, பின்னர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி பயணம் தொடர்ந்தார்.
வழியெங்கும் பக்தர்கள் தண்ணீர் பீச்சி அடித்து, சர்க்கரை தீபம் ஏற்றி, “கோவிந்தா கோவிந்தா” என கோஷமிட்டு கள்ளழகரை தரிசித்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த வைபவம் மதுரையை விழாக்கோலமாக மாற்றியது.
வைகையில் கள்ளழகர் எழுந்தருளியபோது பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. தொடர்ந்து நாளை (மே 2) வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ மற்றும் கருட வாகனங்களில் புறப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் வைபவம், தசாவதாரம் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறவுள்ளது.
மே 4 ஆம் தேதி கள்ளழகர் புஷ்ப பல்லக்கில் அழகர்கோயிலுக்கு புறப்பட்டு, மே 5 அன்று கோயிலில் சேர்ந்தடைவார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்