'துரோகிகளைப் பற்றி பேச வேண்டாம்; புதிய நிர்வாகிகளுடன் அதிமுக வலுப்படும்' - பழனிசாமி உறுதி
சட்டசபை தேர்தல் தோல்வி, வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் தி.மு.க.வின் வலுவான ஆதிக்கம் மற்றும் கூட்டணியின் பலவீனம் காரணமாக வெற்றி பெற முடியவில்லை என்று சில நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த பழனிசாமி, "லால்குடியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது எப்படி? முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருந்தால் மேலும் பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தின் போது சிலர், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டினர். அதற்கு பதிலளித்த பழனிசாமி, "துரோகம் செய்தவர்களைப் பற்றி தொடர்ந்து பேசுவதால் எந்த பயனும் இல்லை. இனி கட்சியை வலுப்படுத்துவதே முக்கியம்" என்று வலியுறுத்தினார்.
மேலும், கட்சியில் ஏற்கனவே புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து மட்டங்களிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை இலக்காகக் கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமெனவும், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
'எல் நினோ' தாக்கத்துக்கு மத்திய அரசு முழு தயார்: வறட்சி அபாய மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு
15 மணி நேரங்கள் முன்பு
650 மருத்துவ இடங்கள் பாதிப்பு: சுகாதார அமைச்சரிடம் முக்கிய கேள்வி எழுப்பிய அண்ணாமலை
17 மணி நேரங்கள் முன்பு
வயநாடு நிலச்சரிவு: அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அமித் ஷா உறுதி
1 நாட்கள் முன்பு
அமர்நாத் யாத்திரையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு; 5 நாட்களில் 1.13 லட்சம் தரிசனம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்