ஆந்திர போலீஸ் நடவடிக்கை: நாடு முழுவதும் தேடுதல் – 12 தீவிரவாதிகள் கைது
அமராவதி: ஆந்திரப் பிரதேச போலீசார் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி, பல்வேறு மாநிலங்களில் ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நடவடிக்கையில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாத கருத்துகளை பரப்பிய மூவர் விஜயவாடாவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முகமது ரஹ்மத்துல்லா ஷரீப், மிர்ஷா சோகைல் பெக் மற்றும் முகமது தனிஷ் என அடையாளம் காணப்பட்டனர்.
விசாரணையில், ‘அல் மாலிக் இஸ்லாமிக் யூத்’ என்ற அமைப்பை உருவாக்கி, அல்-குவைதா மற்றும் ஐ.எஸ். போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், வெளிநாட்டை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ‘அல்-ஹக்கீம் ஷுகூர்’ உடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. இவர்கள் பீஹார் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள நபர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் நடவடிக்கை நடத்தி மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர்க்க முயன்றதுடன், பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்