உடனடி செய்தி

டி-20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மாவின் அபார சாதனை | 200+ ஸ்டிரைக் ரேட் உலக சாதனை

டி-20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மாவின் அபார சாதனை | 200+ ஸ்டிரைக் ரேட் உலக சாதனை

புதுடில்லி:
இந்திய 'டி-20' அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா, டி-20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஒரு ஆண்டில் குறைந்தது 1000 ரன் எடுத்த வீரர்களில், 200க்கும் மேற்பட்ட பேட்டிங் ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ள முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் பதிவு செய்துள்ளார்.

ரோகித் சர்மா ஓய்வுக்குப் பிறகு, இந்திய 'டி-20' அணியில் அபிஷேக் சர்மா முக்கிய துவக்க வீரராக மாறியுள்ளார். 2025ஆம் ஆண்டில் மட்டும் அவர் மொத்தமாக 1602 ரன்களை குவித்துள்ளார். உள்ளூர் போட்டிகள், சர்வதேச 'டி-20' மற்றும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் சேர்த்து, அவரது சராசரி ஸ்டிரைக் ரேட் 202.01 ஆக உள்ளது.

இந்தியா, பஞ்சாப் மற்றும் ஐதராபாத் (ஐபிஎல்) அணிகளுக்காக தொடர்ந்து ரன் மழை பொழிந்து வரும் அபிஷேக், சர்வதேச 'டி-20' போட்டிகளில் 859 ரன்களை 193.46 ஸ்டிரைக் ரேட்டுடன் எடுத்துள்ளார். இதன் மூலம் 2025ல் குறைந்தது 500 ரன் எடுத்த வீரர்களில், அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரராக முதலிடம் பிடித்துள்ளார்.

இதன் மூலம், கேப்டன் சூர்யகுமார யாதவ் (1164 ரன், 187.43 ஸ்டிரைக் ரேட்) உள்ளிட்ட முன்னணி வீரர்களை அபிஷேக் சர்மா பின் தள்ளியுள்ளார். தற்போது 908 புள்ளிகளுடன் சர்வதேச பேட்டர் தரவரிசையில் உலகின் நம்பர்-1 வீரராக திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்மிருதி மந்தனா ரூ.1.11 கோடிக்கு மான்செஸ்டர் அணியில் – ‘தி ஹண்டிரடு’ பெண்கள் கிரிக்கெட் தொடரில் பெரிய ஒப்பந்தம்
ஸ்மிருதி மந்தனா ரூ.1.11 கோடிக்கு மான்செஸ்டர் அணியில் – ‘தி ஹண்டிரடு’ பெண்கள் கிரிக்கெட் தொடரில் பெரிய ஒப்பந்தம்
19 மணி நேரங்கள் முன்பு
சி.கே. நாயுடு டிராபி: மகாராஷ்டிராவை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன்
சி.கே. நாயுடு டிராபி: மகாராஷ்டிராவை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன்
1 நாட்கள் முன்பு
பும்ரா கவனம் ஒருநாள் போட்டிகளுக்கு; 2027 உலகக்கோப்பை நோக்கி இந்திய அணி திட்டம்
பும்ரா கவனம் ஒருநாள் போட்டிகளுக்கு; 2027 உலகக்கோப்பை நோக்கி இந்திய அணி திட்டம்
2 நாட்கள் முன்பு
டி-20 உலக கோப்பை 2026: இந்தியா சாம்பியன் – முன்னாள் வீரர்களின் வாழ்த்து மழை
டி-20 உலக கோப்பை 2026: இந்தியா சாம்பியன் – முன்னாள் வீரர்களின் வாழ்த்து மழை
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்