உடனடி செய்தி

அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா, தினகரன்? ஒன்றிணைப்பு முயற்சிக்கு ரகசிய பேச்சுவார்த்தை

அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா, தினகரன்? ஒன்றிணைப்பு முயற்சிக்கு ரகசிய பேச்சுவார்த்தை
சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.வை மீண்டும் பலப்படுத்தும் நோக்கில், கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்திய அ.தி.மு.க. நிர்வாகி மகேந்திரனின் மரணத்திற்குப் பின்னர், பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பது குறித்து கட்சி தலைமையின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதையடுத்து, மூத்த தலைவர் ஒருவரின் மூலம் ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா தரப்பில், கட்சியில் இணைந்தால் அவருக்கு அவைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், டிடிவி தினகரன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டுமெனில், துணை பொதுச்செயலாளர் பதவி மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இளைஞர்களை அதிகளவில் கட்சியில் இணைக்கும் திட்டங்களையும் அ.தி.மு.க. தலைமையகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்