உடனடி செய்தி

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
புதுடில்லி: வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தியா செயல்பட்டு வரும் நிலையில், பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும் திறன் கொண்டுள்ளது என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் புதுடில்லியில் செப். 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதால், மாநாட்டை முன்னிட்டு தலைநகர் டில்லியில் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்பதற்காக டில்லி வந்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தை பாராட்டியுள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தற்போது பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமை தாங்கி வரும் இந்தியாவை, சிறப்பாக வளர்ந்து வரும் நாடாக ஈரான் கருதுகிறது. பிரிக்ஸ் அமைப்பையும் அதன் உறுப்பு நாடுகளையும் திறம்பட வழிநடத்தும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக நம்புகிறோம். பிரிக்ஸ் தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பதை ஈரான் வரவேற்கிறது. மேலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்பதில் உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர் என்றும் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
“சொல் ஒன்று, செயல் வேறு” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த பழனிசாமி
“சொல் ஒன்று, செயல் வேறு” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த பழனிசாமி
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்