பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணத்திற்கு உட்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக கோலி, பீல், மேக்வார் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக சிறுபான்மையினர் நல அமைப்புகள் தெரிவிக்கின்றன.
சிறுமிகள் காணாமல் போன பின்னர் அவர்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் திருமணம் செய்து வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுபான்மையினர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், சிந்து மாகாணத்தின் டாண்டோ அல்லாயார் மாவட்டத்தில் 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஹிந்து சகோதரிகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீதா மற்றும் ரூபி என்ற அந்த இரு சிறுமிகளும் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பின்னர் இரு சிறுமிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் அழுதபடி தங்களை வீட்டிற்கு அனுப்புமாறு கோரியதாக கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றம் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த நாளே 14 வயதான பன்சி கோலி என்ற மற்றொரு ஹிந்து சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், செப்டம்பர் மாதம் தொடங்கி 10 நாட்களுக்குள் ஆறு ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியாக வெளியாகும் இதுபோன்ற புகார்கள், சிந்து மாகாணத்தில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
57 நிமிடங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
“சொல் ஒன்று, செயல் வேறு” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த பழனிசாமி
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்