செய்திகள்
⚡ உடனடி செய்தி
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. சமீபத்திய சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து, தற்போது அது வெளிப்படையான பிளவாக மாறும் நிலையில் உள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமிக்கு எதிராக திரண்டுள்ளனர். அவர்கள், சட்டசபை அ.தி.மு.க. தலைவராக வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.
மற்றொரு பக்கம், பழனிசாமிக்கு ஆதரவாக வெறும் 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சட்டசபை குழு தலைவரை தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், பழனிசாமி பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை நகரில் பல ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், எதிர்ப்பு அணியில் உள்ள சிலர், த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பதற்கும், சிலர் நேரடியாக அந்தக் கட்சியில் இணையவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், மற்றொரு அணியினர், அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே ஆதரவு வழங்கலாம் எனக் கூறுகின்றனர்.
இந்த உள்கட்சி குழப்பம் காரணமாக, அ.தி.மு.க. சட்டசபையில் இரண்டாக பிரியும் அபாயம் அதிகரித்துள்ளது. சபாநாயகர், "அ.தி.மு.க.-1" மற்றும் "அ.தி.மு.க.-2" என பிரித்து அறிவிக்க வேண்டிய நிலையும் உருவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
கொலம்பியாவில் சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 111 பேர் பலி; நாடு தழுவிய அவசரநிலை
8 மணி நேரங்கள் முன்பு
அம்பாசமுத்திரத்தில் மீண்டும் சுவாமி சிலைகள் சேதம்: உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
8 மணி நேரங்கள் முன்பு
பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்: சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
9 மணி நேரங்கள் முன்பு
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்