கொலம்பியாவில் சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 111 பேர் பலி; நாடு தழுவிய அவசரநிலை
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதும் அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக வீதிகளில் திரண்டனர். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வெனிசுலா எல்லைப் பகுதிகள் மற்றும் ஈக்குவடாரிலும் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் விமானப் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. மேற்கு கொலம்பியாவில் உள்ள பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும் 87 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தையடுத்து கொலம்பியா முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப் படையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
நிலநடுக்கத்தில் 61 கட்டடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்ததுடன், 1,575 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 18 சுகாதார மையங்கள், 52 கல்வி நிறுவனங்கள், 17 சமூக மையங்கள் மற்றும் 18 சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கொலம்பியா அரசு உறுதியளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அம்பாசமுத்திரத்தில் மீண்டும் சுவாமி சிலைகள் சேதம்: உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
6 மணி நேரங்கள் முன்பு
பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்: சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
6 மணி நேரங்கள் முன்பு
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
1 நாட்கள் முன்பு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்