உடனடி செய்தி

ஆஸ்திரேலிய ஓபன்: பைனலில் சபலென்கா–ரிபாகினா மோதல்; ஜோகோவிச் இன்று களமிறக்கம்

ஆஸ்திரேலிய ஓபன்: பைனலில் சபலென்கா–ரிபாகினா மோதல்; ஜோகோவிச் இன்று களமிறக்கம்

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தின.

முதல் அரையிறுதியில், உலகின் நம்பர்–1 வீராங்கனை பெலாரசின் அரினா சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார். ஆதிக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா, முதல் செட்டை 6–2 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6–3 என வென்ற அவர், ஒரு மணி நேரம் 16 நிமிடம் நீடித்த போட்டியில் நேர் செட் வெற்றியுடன் பைனலுக்கு முன்னேறினார். இதன் மூலம், தொடர்ந்து நான்காவது முறையாக (2023–2026) ஆஸ்திரேலிய ஓபன் பைனலுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரையிறுதியில், உலகின் நம்பர்–5 வீராங்கனை கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்தித்தார். முதல் செட்டை 6–3 என வென்ற ரிபாகினா, கடும் போராட்டமாக மாறிய இரண்டாவது செட்டை டை-பிரேக்கரில் 7–6 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம் 40 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற ரிபாகினா, இரண்டாவது முறையாக (2023, 2026) பைனலுக்குள் நுழைந்தார்.

இதனால், பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அரினா சபலென்கா மற்றும் எலினா ரிபாகினா நேருக்கு நேர் மோத உள்ளனர்.

இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிகள் இன்று (ஜனவரி 30) நடைபெறுகின்றன. ஒரு போட்டியில், உலகின் நம்பர்–2 வீரர் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிசை எதிர்கொள்கிறார். ஜோகோவிச் வெற்றி பெற்றால், 11வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பைனலுக்கு தகுதி பெறுவார். மறுபுறம், தொடர்ச்சியாக இரண்டு முறை (2024, 2025) சாம்பியன் பட்டம் வென்ற சின்னர் வென்றால், மூன்றாவது முறையாக பைனலுக்குள் நுழைவார்.

மற்றொரு அரையிறுதியில், உலகின் நம்பர்–1 ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்திக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப் அதிரடி சாதனை: 265 ரன் சேஸ் செய்து வரலாற்று வெற்றி
பஞ்சாப் அதிரடி சாதனை: 265 ரன் சேஸ் செய்து வரலாற்று வெற்றி
2 நாட்கள் முன்பு
சஞ்சு சாம்சன் சதம் – சென்னை அணி அதிரடி வெற்றி; மும்பை சரிவு
சஞ்சு சாம்சன் சதம் – சென்னை அணி அதிரடி வெற்றி; மும்பை சரிவு
4 நாட்கள் முன்பு
ராஜஸ்தான் அதிரடி: லக்னோவை 40 ரன்களில் வீழ்த்தி 5வது வெற்றி
ராஜஸ்தான் அதிரடி: லக்னோவை 40 ரன்களில் வீழ்த்தி 5வது வெற்றி
5 நாட்கள் முன்பு
டில்லி சரிவு: அபிஷேக் சூறாவளியில் ஐதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
டில்லி சரிவு: அபிஷேக் சூறாவளியில் ஐதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
6 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்