உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

கனடாவில் மோகன் பாகவத்துக்கு உற்சாக வரவேற்பு; ஹிந்து சமூகத்தினர் நெகிழ்ச்சி

கனடாவில் மோகன் பாகவத்துக்கு உற்சாக வரவேற்பு; ஹிந்து சமூகத்தினர் நெகிழ்ச்சி
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் தலைவர் மோகன் பாகவத் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கனடாவின் டொராண்டோ நகருக்கு வருகை தந்த அவருக்கு, அங்குள்ள ஹிந்து புலம்பெயர் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். டொராண்டோவில் நடைபெற்ற 'இந்து விஸ்வ பந்து - உலகளாவிய நட்பு' நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பங்கேற்று உரையாற்றினார். கனடாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கென்னி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மோகன் பாகவத்தின் கனடா பயணத்திற்கு அந்நாட்டின் சில எம்.பி.க்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கனடாவில் உள்ள பல்வேறு ஹிந்து அமைப்புகள் அவரது வருகைக்கு ஆதரவு தெரிவித்தன. டொராண்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனடாவின் எட்டு மாகாணங்களைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பங்கேற்க முன்வந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ஹிந்து சமூகத்தினர் உற்சாகம் விமானப்படையின் முன்னாள் அதிகாரி கார்த்திக் திரிவேதி கூறுகையில், ''15 ஆண்டுகளாக கனடாவுக்கு சேவை செய்து வருகிறேன். ஒரு பெருமைமிக்க ஹிந்துவாக எனது அடையாளத்தில் எப்போதும் உறுதியாக இருந்துள்ளேன். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுவதை நேரில் கேட்பது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு,'' என்றார். டொராண்டோ பகுதியைச் சேர்ந்த ஹிந்து சபா கோவில் பிரதிநிதி ரஜிந்தர் பிரசாத் கூறுகையில், ''மோகன் பாகவத்தின் வருகை, உலகம் ஒரே குடும்பம் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. நமது கலாசாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்,'' என்றார். ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும், மோகன் பாகவத்தின் வருகை அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் முக்கிய தருணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தனர். 'உலகம் ஒரே குடும்பம்' நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: உலகின் எந்த பகுதியில் இருந்து உதவி கோரிக்கை வந்தாலும் பாரதம் அதை மறுத்ததில்லை. பல நேரங்களில் கேட்காமலேயே உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதுவே இந்தியாவின் பாரம்பரியமும் அதன் இயல்பும் ஆகும். ஹிந்துக்கள் விழித்தெழுந்தால் உலகமும் விழித்தெழும். உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற உயர்ந்த தத்துவத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திய பாரம்பரியம் வேற்றுமையை ஒற்றுமைக்கு எதிரானதாக ஒருபோதும் கருதவில்லை. வேற்றுமையிலும் ஒற்றுமையை காண்பதே நமது பாரம்பரியத்தின் சிறப்பு. ஒருகாலத்தில் பாரதத்தை ஒரு வல்லரசு என்று கூறியிருக்கலாம். ஆனால் பாரதம் உலகை ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருக்க விரும்பவில்லை. உலகிற்கு சேவை செய்வதையே தனது இயல்பாக கொண்டிருந்தது. அதனால் அது ஒரு மகாசக்தியாக மட்டுமல்லாமல், 'விஸ்வகுரு'வாக உயர்ந்தது. பாரதத்தின் எழுச்சி என்பது மனிதகுலத்தின் நலனோடு தொடர்புடையது. உடல், உருவம், நிறம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், சாராம்சத்தில் அனைவரும் ஒன்றே. எனவே, பிறருக்குச் சேவை செய்வது நமது கடமையாகும். மனிதகுல ஒற்றுமை மற்றும் சேவை மனப்பான்மையே நிலையான மகிழ்ச்சியையும் மனநிறைவையும் வழங்கும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

நேபாள வெள்ளத்தில் பலி 800ஐ நெருங்கியது; அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய அரசு முடிவு
நேபாள வெள்ளத்தில் பலி 800ஐ நெருங்கியது; அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய அரசு முடிவு
2 மணி நேரங்கள் முன்பு
முதல்வர் விஜய் குறித்து பாக்., சமூக வலைதள பிரசாரம்? 'இன்ப்ளூயன்ஸர்' கணக்குகளை கண்காணிக்கும் உளவுத்துறை
முதல்வர் விஜய் குறித்து பாக்., சமூக வலைதள பிரசாரம்? 'இன்ப்ளூயன்ஸர்' கணக்குகளை கண்காணிக்கும் உளவுத்துறை
2 மணி நேரங்கள் முன்பு
இந்திய தேசியக் கொடி நிறங்களில் ஜொலித்த தாஷ்கண்ட் ஹில்டன்; பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
இந்திய தேசியக் கொடி நிறங்களில் ஜொலித்த தாஷ்கண்ட் ஹில்டன்; பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
1 நாட்கள் முன்பு
செம்மஞ்சேரி சர்வதேச விளையாட்டு நகரத் திட்டத்தில் திருப்பம்: ரூ.206 கோடி கட்டுமான ஒப்பந்தம் ரத்து
செம்மஞ்சேரி சர்வதேச விளையாட்டு நகரத் திட்டத்தில் திருப்பம்: ரூ.206 கோடி கட்டுமான ஒப்பந்தம் ரத்து
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்