சஞ்சு சாம்சன் சதம் – சென்னை அணி அதிரடி வெற்றி; மும்பை சரிவு
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை அணி, மும்பையை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
'டாஸ்' வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில் சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சாதாரண துவக்கம் அளித்தாலும், சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஓவரில் பவுண்டரி, சிக்சர்களுடன் ரன்களை வேகமாக சேர்த்தார்.
நடுத்தர கட்டத்தில் சில விக்கெட்டுகள் விரைவாக விழுந்தாலும், சாம்சன் நிலைத்து விளையாடி சதம் அடித்தார். கடைசி ஓவரில் சிக்சர்கள் அடித்து 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி 20 ஓவரில் 207/6 என்ற பலமான இலக்கை நிர்ணயித்தது.
இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. அகீல் ஹொசைன் தனது சுழற்பந்துவீச்சால் தொடக்க விக்கெட்டுகளை சாய்த்து அழுத்தம் கொடுத்தார். 11 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த மும்பை அணி பின்னர் மீள முடியவில்லை.
சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா சிறிய கூட்டணி அமைத்தாலும், அது நீடிக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் மும்பை அணி 104 ரன்களுக்கு சுருண்டது.
சென்னை அணியின் அகீல் ஹொசைன் 4 விக்கெட் எடுத்து ஆட்டநாயகனாகத் திகழ்ந்தார்.
இப்போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி தனது தாயார் மறைவிற்குப் பின்னரும் அணிக்காக விளையாடியது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
தொடர்புடைய செய்திகள்
ராஜஸ்தான் அதிரடி: லக்னோவை 40 ரன்களில் வீழ்த்தி 5வது வெற்றி
2 நாட்கள் முன்பு
டில்லி சரிவு: அபிஷேக் சூறாவளியில் ஐதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
3 நாட்கள் முன்பு
திலக் வர்மா அதிரடி சதம்: மும்பை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
4 நாட்கள் முன்பு
பஞ்சாப் அதிரடி வெற்றி: லக்னோ அணியை 54 ரன்களில் சாய்த்தது
5 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்