சர்வதேச யோகா தினம்: கொல்கத்தாவில் 35 ஆயிரம் பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி
12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குப் பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; மக்களை ஒன்றிணைக்கும் ஒரு வாழ்க்கை முறையாகும் என்று கூறினார்.
மேலும், இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரையும், மேற்கு வங்கம் முதல் சவுராஷ்டிரா வரையும், நாடு முழுவதும் யோகாவின் ஆற்றல் பரவி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உலக நாடுகளிடையே ஒற்றுமை, ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை ஏற்படுத்தும் சக்தியாக யோகா திகழ்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்