உடனடி செய்தி

சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் வெற்றி – மும்பை இந்தியன்ஸ் மீண்டும் தோல்வி

சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் வெற்றி – மும்பை இந்தியன்ஸ் மீண்டும் தோல்வி
சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானம் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்கம் சீராக இல்லை. ரிக்கிள்டன் 37 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினாலும், மற்ற வீரர்கள் தொடர்ந்து அவுட்டாகினர். நமன் திர் 57 ரன்கள் எடுத்தும் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 159/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் பந்துவீச்சில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகள் மற்றும் நூர் அகமது 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 160 ரன்கள் இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் 67 ரன்களும், கார்த்திக் 54 ரன்களும் அடித்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர். சென்னை அணி 18.1 ஓவர்களில் 160/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் சென்னை அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது. மாறாக, மும்பை இந்தியன்ஸ் அணி ஏழாவது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்