சீலை உடைத்து இயங்கிய சாய ஆலைகள்: அமைச்சர் விஜயலட்சுமி நள்ளிரவு ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் விதிமீறி செயல்பட்ட சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சீல் வைக்கப்பட்ட சில ஆலைகள் மீண்டும் சட்டவிரோதமாக இயங்கியது அமைச்சர் விஜயலட்சுமியின் நள்ளிரவு ஆய்வில் கண்டறியப்பட்டது.
முன்னதாக, சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல சாய ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து சீல் வைத்திருந்தனர்.
இதனால் தொழில் பாதிக்கப்பட்டதாக கூறிய சாய ஆலை உரிமையாளர்கள் அமைச்சரை சந்தித்து கால அவகாசம் கோரிய நிலையில், ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும், சீல் வைக்கப்பட்ட சில ஆலைகள் சீலை உடைத்து இரவு நேரங்களில் மீண்டும் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அமைச்சர் விஜயலட்சுமி நள்ளிரவில் ஒட்டமெத்தை மற்றும் ஆவத்திபாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சீல் உடைக்கப்பட்ட நிலையில் இரண்டு சாய ஆலைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர், சுற்றுச்சூழல் விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
மேலும், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், விதிமீறி செயல்பட்ட 20 சாய ஆலைகள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து அவற்றின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கோவில் கருவறையில் முதல்வர் விஜய் படம்: ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
3 மணி நேரங்கள் முன்பு
இஸ்லாம் மதத்திற்கு மாறியவருக்கு பி.சி. முஸ்லிம் அந்தஸ்து இல்லை: தமிழக அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
3 மணி நேரங்கள் முன்பு
திமுக கூட்டணி தொடருமா? கூட்டணி அரசியலை மறுபரிசீலனை செய்ய ஸ்டாலின் சுட்டிக்காட்டு
1 நாட்கள் முன்பு
ஜூலை 1 முதல் மாநிலம் முழுவதும் களப்பணி: அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்குகிறார்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்