எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவில் 75வது ஆண்டு மகோத்சவ விழாவில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “தேச நலன் முதன்மையாக இருக்கும் வரை எந்த வெளிநாட்டு அழுத்தமும் இந்தியாவின் உறுதியை பாதிக்க முடியாது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான காலத்திலும் உலக அழுத்தங்களை இந்தியா வெற்றிகரமாக சமாளித்தது. அது தேசிய நலனில் நம் உறுதியை வெளிப்படுத்தியது” என்றார்.
இந்த விழா ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல; இந்தியாவின் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான ஊக்கமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது, 1951ல் சோம்நாத் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பதும் இந்தியாவின் ஆன்மீக மறுமலர்ச்சியை உலகிற்கு காட்டியது என்றும் கூறினார்.
மேலும், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் ஒன்றாக பயணிக்கின்றன என்று தெரிவித்தார். மே 11ம் தேதி இந்திய வரலாற்றில் முக்கியமான நாள் என்றும், 1998ல் இதே தேதியில் இந்தியா அணு ஆயுத சோதனையில் வெற்றி பெற்றது என்றும் அவர் நினைவூட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் போது சோம்நாத் கோவிலின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்