உடனடி செய்தி

அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு

அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
சென்னை: தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்குவது தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு கார் வழங்க முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ.,க்களும் அரசு வழங்கும் வாகனங்களை பெறப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார். அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும் வாகன வசதி வழங்கலாம் என்றும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் சமம் என்ற அடிப்படையிலேயே முதல்வர் வாகன வசதியை அறிவித்துள்ளதாக தெரிவித்தார். தொகுதியில் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருப்பதால், மக்கள் பணிக்காக எம்.எல்.ஏ.,க்களுக்கு வாகனம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பா.ம.க. உறுப்பினர்களும், ஏற்கனவே வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அரசு கார் தேவையில்லை என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் வழங்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். பா.ம.க. சட்டசபை குழுத் தலைவர் சவுமியா, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் ஏற்கனவே வாகனங்கள் இருப்பதால் அரசு வழங்கும் கார்களை பெறப்போவதில்லை என தெரிவித்தார். அதற்கு பதிலாக, வாகனங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை தொகுதிகளில் நெல் கொள்முதல் கிடங்கு அமைக்க பயன்படுத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறினார். இதனால், அரசு வாகனங்கள் வழங்கும் திட்டம் தொடர்பாக சட்டசபையில் அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
17 மணி நேரங்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
17 மணி நேரங்கள் முன்பு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
1 நாட்கள் முன்பு
இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் சாலையில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கி இந்திய ராணுவம் ஒத்திகை
இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் சாலையில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கி இந்திய ராணுவம் ஒத்திகை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்