ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் கல் வீச்சு நடத்தப்பட்டதாகவும், கட்சியினர் சென்ற கார் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு குறைபாடுகளை ஆய்வு செய்யும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூர் கன்வார்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளியை கரப்பான்பூச்சி கட்சியினர் பார்வையிட சென்றனர். பள்ளி வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பள்ளியை சீரமைக்க ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிலர் கற்களை வீசியதில் கட்சியினர் சென்ற கார் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்திற்கு கரப்பான்பூச்சி கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
17 மணி நேரங்கள் முன்பு
அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
17 மணி நேரங்கள் முன்பு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
1 நாட்கள் முன்பு
இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் சாலையில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கி இந்திய ராணுவம் ஒத்திகை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்