உடனடி செய்தி

ஹிந்து கோவில்கள் குறித்த தகவலை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த இருவர் கைது

ஹிந்து கோவில்கள் குறித்த தகவலை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த இருவர் கைது
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்புடைய நபருடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தது இந்திய உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், ஹபூர் மாவட்டம் தவுலானா பகுதியில் இருந்து சந்தேக நபர்களான இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் அசீம் ரானா (பீப்லிஹ்டா பகுதி) மற்றும் ஆசாத் ராஜ்புத் (மீரட் மாவட்டம்) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் 2025 டிசம்பர் மாதம் முதல் சாஜாத் பாட்டி என்ற ஐ.எஸ்.ஐ. தொடர்புடைய நபருடன் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்து, மேற்கு டெல்லி மெட்ரோ அருகிலுள்ள கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இருப்பிட விவரங்களை பகிர்ந்துள்ளனர். மேலும், கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள பிஸ்ராக் கோவிலின் தகவல்களையும் அவர்கள் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித்திட்டமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்