உடனடி செய்தி

ஈரான் 4,000 கி.மீ. ஏவுகணை சோதனை: உலக நாடுகள் அதிர்ச்சி

ஈரான் 4,000 கி.மீ. ஏவுகணை சோதனை: உலக நாடுகள் அதிர்ச்சி
மேற்காசிய நாடான ஈரான், தனது நீள தூர தாக்குதல் திறனை வெளிப்படுத்தும் வகையில் 4,000 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய ஏவுகணை சோதனையை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் நீடித்து வரும் பதற்ற நிலை மத்தியில், இந்த நடவடிக்கை உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில வாரங்களாக நீடித்து வரும் மோதல் சூழ்நிலையில், ஈரான் தனது ராணுவ திறனை வெளிப்படுத்த முயற்சி செய்கிறது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவு பகுதியில் உள்ள அமெரிக்கா-பிரிட்டன் இராணுவ தளத்தை குறிவைத்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியடைந்ததுடன், மற்றொன்று பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இதற்கு முன்பு 2,000 கி.மீ. தூரம் வரை மட்டுமே தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இரட்டிப்பு தூரத்தை நோக்கி முயற்சி செய்திருப்பது உலக நாடுகளில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த முயற்சி வெற்றி அல்லது தோல்வி என்பதைக் கடந்து, அந்த தூரம் வரை தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தியிருப்பதே முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் முன்னேற்றமான ஏவுகணை தடுப்பு அமைப்பான SM-3 செயல்படுத்தப்பட்டிருப்பதும், இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இதன் மூலம் ஐரோப்பா மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியங்களையும் அடையும் திறன் ஈரானுக்கு இருக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கையகப்படுத்திய நிலம் பழநி கோயிலுக்கே மாற்றப்படும்; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
கையகப்படுத்திய நிலம் பழநி கோயிலுக்கே மாற்றப்படும்; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
13 மணி நேரங்கள் முன்பு
பதவியேற்பு விதிமீறல்: 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவியேற்பை ரத்து செய்த கேரள ஐகோர்ட்
பதவியேற்பு விதிமீறல்: 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவியேற்பை ரத்து செய்த கேரள ஐகோர்ட்
13 மணி நேரங்கள் முன்பு
ஹார்முஸ் ஜலசந்தி சீரடைந்ததால் கச்சா எண்ணெய் விலை சரிவு; 4 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
ஹார்முஸ் ஜலசந்தி சீரடைந்ததால் கச்சா எண்ணெய் விலை சரிவு; 4 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
13 மணி நேரங்கள் முன்பு
‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்