உடனடி செய்தி

ஈரான் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்காவின் ‘பங்கர் பஸ்டர்’ தாக்குதல்

ஈரான் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்காவின் ‘பங்கர் பஸ்டர்’ தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தின் பின்னணியில், ஈரானின் ஏவுகணை தளங்களை குறிவைத்து அமெரிக்கப் படைகள் துல்லியமான விமானத் தாக்குதலை மேற்கொண்டன. சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை அழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. ஈரான் முன்பு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் உலகளாவிய வர்த்தக பாதையில் பதற்றம் அதிகரித்தது. இந்த சூழலில், ஜலசந்தி பாதுகாப்பை உறுதி செய்ய பல நாடுகளின் ஆதரவை அமெரிக்கா கோரியிருந்தது. ஆனால் பல நாடுகள் இதில் ஈடுபட மறுத்தன. இதையடுத்து, சுமார் 5,000 பவுண்ட் எடையுடைய ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை பயன்படுத்தி, ஈரான் கடற்கரைக்கு அருகிலுள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த நடவடிக்கை சர்வதேச கடல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கையகப்படுத்திய நிலம் பழநி கோயிலுக்கே மாற்றப்படும்; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
கையகப்படுத்திய நிலம் பழநி கோயிலுக்கே மாற்றப்படும்; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
13 மணி நேரங்கள் முன்பு
பதவியேற்பு விதிமீறல்: 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவியேற்பை ரத்து செய்த கேரள ஐகோர்ட்
பதவியேற்பு விதிமீறல்: 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவியேற்பை ரத்து செய்த கேரள ஐகோர்ட்
13 மணி நேரங்கள் முன்பு
ஹார்முஸ் ஜலசந்தி சீரடைந்ததால் கச்சா எண்ணெய் விலை சரிவு; 4 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
ஹார்முஸ் ஜலசந்தி சீரடைந்ததால் கச்சா எண்ணெய் விலை சரிவு; 4 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
13 மணி நேரங்கள் முன்பு
‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்