இந்தியா - வியட்நாம் உறவில் புதிய அத்தியாயம்: 13 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளது. வியட்நாம் அதிபர் டோ லாம் தனது முதல் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு, அரிய கனிம வளங்கள், கல்வி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, வங்கி சேவைகள், மருந்து உற்பத்தி, கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் மொத்தம் 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி தெரிவித்தன. குறிப்பாக தென் சீன கடல் பகுதியில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி பேசியபோது, இந்தியா மற்றும் வியட்நாம் உறவு கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 2.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய மருந்துகள் வியட்நாமில் எளிதில் கிடைக்க வழிவகுக்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதேபோல் இந்தியாவின் வேளாண் பொருட்கள், மீன்வளம், திராட்சை மற்றும் மாதுளம் பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வியட்நாமுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அரிய கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி துறைகளில் இணைந்து புதிய முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியா - வியட்நாம் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
3 மணி நேரங்கள் முன்பு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
3 மணி நேரங்கள் முன்பு
அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை
3 மணி நேரங்கள் முன்பு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்