உடனடி செய்தி

திருவனந்தபுரம் டி20: இஷான் கிஷான் சதம், 46 ரன் வெற்றி – நியூசிலாந்தை 4-1 என இந்தியா வீழ்த்தியது

திருவனந்தபுரம் டி20: இஷான் கிஷான் சதம், 46 ரன் வெற்றி – நியூசிலாந்தை 4-1 என இந்தியா வீழ்த்தியது

திருவனந்தபுரம்: நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 46 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் ஷர்மா 30 ரன் எடுத்தார்.

பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் இணைந்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். 26 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 63 ரன் குவித்தார்.

இஷான் கிஷான் 42 பந்துகளில் சதம் அடித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். நியூசிலாந்துக்கு எதிராக ஒரு இந்தியர் அடித்த அதிவேக சதமாக இது அமைந்தது. அவர் 103 ரன் எடுத்தார்.

ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 42 ரன் விளாசினார். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 169 ரன் சேர்க்கப்பட்டது.

271 ரன் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஆலன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளில் 80 ரன் எடுத்த அவர் அக்ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

ரவீந்திரா 30, டேரில் மிட்செல் 26 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் வெளியேற, நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் 225 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி முத்திரை பதித்தார். அக்ஷர் படேல் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 36 சிக்ஸர்கள் அடித்துள்ளன. இது டி20 வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சாதனையாகும்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப் அதிரடி சாதனை: 265 ரன் சேஸ் செய்து வரலாற்று வெற்றி
பஞ்சாப் அதிரடி சாதனை: 265 ரன் சேஸ் செய்து வரலாற்று வெற்றி
2 நாட்கள் முன்பு
சஞ்சு சாம்சன் சதம் – சென்னை அணி அதிரடி வெற்றி; மும்பை சரிவு
சஞ்சு சாம்சன் சதம் – சென்னை அணி அதிரடி வெற்றி; மும்பை சரிவு
4 நாட்கள் முன்பு
ராஜஸ்தான் அதிரடி: லக்னோவை 40 ரன்களில் வீழ்த்தி 5வது வெற்றி
ராஜஸ்தான் அதிரடி: லக்னோவை 40 ரன்களில் வீழ்த்தி 5வது வெற்றி
5 நாட்கள் முன்பு
டில்லி சரிவு: அபிஷேக் சூறாவளியில் ஐதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
டில்லி சரிவு: அபிஷேக் சூறாவளியில் ஐதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
6 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்