உடனடி செய்தி

சோகோட்ரா தீவில் சிக்கிய இந்தியப் பெண் சவூதி வழியாக மீட்பு – இந்தியா பாதுகாப்பாக திரும்பினார்

சோகோட்ரா தீவில் சிக்கிய இந்தியப் பெண் சவூதி வழியாக மீட்பு – இந்தியா பாதுகாப்பாக திரும்பினார்

ஏமனின் சோகோட்ரா தீவில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ரக்கி கிஷன் கோபால், சவூதி அரேபியா வழியாக வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு இன்று (ஜனவரி 8) இந்தியா வந்தடைந்தார்.

ஏமனில் சவுதி ஆதரவு அரசுப் படைகளுக்கும், அமீரகத்துடன் தொடர்புடைய பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக சோகோட்ரா தீவுக்கான விமானச் சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் ரக்கி கிஷன் கோபால் உட்பட சுமார் 400 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு பல வாரங்களாக சிக்கித் தவித்தனர்.

இந்த நிலையை தொடர்ந்து, ஏமனில் உள்ள இந்திய தூதரகத்தின் தலையீட்டின் மூலம் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து இந்திய தூதரகம் எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தகவல் கிடைத்தவுடன் ரக்கி கிஷன் கோபாலை ஏமனியா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் மூலம் சோகோட்ரா தீவிலிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளது.

ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அவரை வரவேற்று, இந்தியா திரும்புவதற்கான உடனடி ஏற்பாடுகளை செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவர் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளார் என தூதரகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
16 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
17 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்