ஜூலையில் மும்மடங்கு மின் கட்டணம் ஏன்? குறைந்த மின்னழுத்தமும் முக்கிய காரணம் என தகவல்
தமிழகத்தில் பல வீடுகளுக்கு ஜூலை மாத மின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக வந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், குறைந்த மின்னழுத்தம் (Low Voltage) மற்றும் தாமதமான மீட்டர் கணக்கெடுப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, சுமார் 9.60 லட்சம் வீடுகளில் மே மாதத்தை விட ஜூலை மாத மின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதில் 3.70 லட்சம் வீடுகளுக்கு மூன்று மடங்கிற்கு மேல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளிக்கையில், ஒரு டிரான்ஸ்பார்மரின் திறனை விட அதிக வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டால், குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படும் என தெரிவித்தனர். இதனால் மின் விசிறி, மிக்ஸி, மோட்டார் பம்ப் உள்ளிட்ட மின் சாதனங்கள் இயங்க அதிக நேரம் மற்றும் கூடுதல் மின்சாரம் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகிறது.
இந்த சூழலில், சராசரியாக 10 சதவீதம் வரை கூடுதல் மின் நுகர்வு பதிவாக வாய்ப்புள்ளதாகவும், அதனால் மின் கட்டணமும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிக மின் கட்டணம் பதிவான வீடுகளில் மீட்டர்கள் மட்டுமின்றி, மின் விநியோக அமைப்புகள் மற்றும் மின்னழுத்த நிலையும் ஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையெனில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்