உடனடி செய்தி

காமன்வெல்த் லான் பவுல்ஸ்: இந்திய அணிக்கு வெற்றிகரமான தொடக்கம்

காமன்வெல்த் லான் பவுல்ஸ்: இந்திய அணிக்கு வெற்றிகரமான தொடக்கம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய அணி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. பெண்கள் இரட்டையர் 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவின் ரூபா ராணி மற்றும் பிங்கி சிங் ஜோடி, மால்டா அணியை டை பிரேக்கரில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதல் செட்டை இந்தியா கைப்பற்றிய நிலையில், இரண்டாவது செட்டை மால்டா வென்றது. தொடர்ந்து நடைபெற்ற டை பிரேக்கரில் இந்திய ஜோடி சிறப்பாக விளையாடி வெற்றியை உறுதி செய்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சோனோவால் புதுல், கனடாவின் உலக சாம்பியன் ரியான் பெஸ்டரை டை பிரேக்கரில் வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி போட்டியை உற்சாகமாக தொடங்கியுள்ளது. கடந்த காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் பிரிவில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
1 மணி நேரங்கள் முன்பு
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
2 நாட்கள் முன்பு
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
3 நாட்கள் முன்பு
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்