உடனடி செய்தி

கடைசி நிமிட கோலால் தப்பித்த பெல்ஜியம்; எகிப்துடன் 1-1 என டிரா

கடைசி நிமிட கோலால் தப்பித்த பெல்ஜியம்; எகிப்துடன் 1-1 என டிரா
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் மோதிய லீக் போட்டி பரபரப்பான டிராவில் முடிந்தது. அமெரிக்காவின் மெட்லைப் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், எகிப்து கேப்டன் முகமது சலா தனது 34வது பிறந்தநாளில் களமிறங்கியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி பந்தை அதிகமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், எகிப்தின் வலுவான தற்காப்பை உடைக்க முடியவில்லை. 29வது நிமிடத்தில் முகமது சலாவின் உதவியுடன் முஸ்தபா முகமது கோல் அடித்து எகிப்தை 1-0 என முன்னிலைப்படுத்தினார். இரண்டாவது பாதியிலும் எகிப்து வீரர்கள் சிறப்பாக தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தோல்வியின் விளிம்பில் இருந்த பெல்ஜியத்திற்கு 86வது நிமிடத்தில் லோயிஸ் ஒபெண்டா கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன. மற்றொரு எச் பிரிவு போட்டியில் சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகள் மோதின. சவுதி அரேபியாவுக்காக அல் அம்ரி முதல் கோலை அடித்தார். பின்னர் உருகுவே அணியின் மெக்ஸிமிலேனோ 80வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமனில் முடிக்க உதவினார்.

தொடர்புடைய செய்திகள்

தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்