கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.14.57 லட்சம் பறிமுதல்
காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி அறையில் இருந்த பையில் இருந்து ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது கைப்பையில் இருந்த ரூ.32,200 மற்றும் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்த ரூ.25,000 ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில், மனைப்பிரிவு ஒப்புதல் பெற ரூ.20 லட்சம் லஞ்சம் கோரப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஊராட்சி தலைவர், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
தேங்கும் வழக்குகள்: நுகர்வோர் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
18 மணி நேரங்கள் முன்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் 821 காலியிடங்கள் மட்டும்; தேர்வர்கள் அதிருப்தி
19 மணி நேரங்கள் முன்பு
விண்வெளி கழிவுகளை அகற்றி இந்தியா புதிய சாதனை
19 மணி நேரங்கள் முன்பு
ஹார்முஸ் ஜலசந்தி மீதான சர்ச்சை தீவிரம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்