கொல்கட்டா முதல் வெற்றி: வருண் சுழல் மாயம், ரிங்கு சிங் அதிரடி அரைசதம்
கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், கொல்கட்டா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி சிறந்த தொடக்கத்தை வழங்கினர். ஆரம்ப ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இவர்கள் அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர். 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தனர்.
ஆனால் 9வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி போட்டியின் போக்கை மாற்றினார். சூர்யவன்ஷி (46) விக்கெட்டை எடுத்த அவர், தொடர்ந்து துருவ் ஜுரல் (5), ரியான் பராக் (12) ஆகியோரை வெளியேற்றி ராஜஸ்தான் அணியை சுருண்டுவிட்டார். நரைனும் ஜெய்ஸ்வால் (39) விக்கெட்டை கைப்பற்றினார்.
முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 155/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
156 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கட்டா அணி ஆரம்பத்தில் சறுக்கின. செய்பர்ட், ரஹானே, கேமரான் கிரீன் ஆகியோர் விரைவில் அவுட்டாக, 7 ஓவர்களில் 52/4 என சிக்கலில் சிக்கியது. பின்னர் மேலும் விக்கெட்டுகள் விழ, 85/6 என தத்தளித்தது.
இந்த நிலையில் ரிங்கு சிங் மற்றும் அனுகுல் ராய் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் 7வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர்.
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங் தொடர்ந்து பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். இதன் மூலம் கொல்கட்டா அணி 19.4 ஓவர்களில் 161/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரிங்கு சிங் 53 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். அனுகுல் ராய் 29 ரன்களுடன் துணைநின்றார்.
பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மேலும், டி20 போட்டிகளில் 200 விக்கெட் எடுத்த 20வது இந்திய பவுலராகவும் சாதனை படைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
பஞ்சாப் அதிரடி வெற்றி: லக்னோ அணியை 54 ரன்களில் சாய்த்தது
10 மணி நேரங்கள் முன்பு
சென்னை அணியின் டாப் ஆர்டர் சரிவு: ஐதராபாத் அணிக்கு 10 ரன் வெற்றி
1 நாட்கள் முன்பு
குஜராத் வெற்றி: சுப்மன் கில் அதிரடி அரைசதம், கொல்கட்டா தோல்வி
2 நாட்கள் முன்பு
பஞ்சாப் அபார வெற்றி: மும்பையை 7 விக்கெட்டில் சாய்த்தது
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்