கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தி.மு.க., 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை: கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் போட்டியிட்டிருந்தால், தி.மு.க., 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் கடுமையாக விமர்சித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தி.மு.க., தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக அக்கட்சி உறுப்பினர் கோவி.செழியன் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க.,வின் தேர்தல் வெற்றியில் கூட்டணி கட்சிகளின் பங்கு முக்கியமானது என தெரிவித்தார்.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்தே தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.
மேலும், த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றும், கூட்டணி கட்சிகளின் வாக்குகள் இல்லாமல் தி.மு.க.,வால் தனித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தி.மு.க., உறுப்பினர்கள், தங்களது கட்சியின் நீண்டகால அரசியல் பயணத்தையும், கூட்டணி அரசியலில் தி.மு.க., பெற்ற வெற்றிகளையும் சுட்டிக்காட்டினர்.
கே.என்.நேரு பேசுகையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் த.வெ.க., ஆட்சி அமைத்துள்ளதாக குறிப்பிட்டு, கூட்டணி கட்சிகளை விலக்கிவிட்டு தனியாக ஆட்சி அமைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த அரசியல் அடையாளம் இருப்பதாகவும், தேர்தல் முடிந்ததும் கூட்டணி தொடர்பான நிலைப்பாடுகள் மாறக்கூடும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, 2006ல் தி.மு.க., காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது தொடர்பாகவும், மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் இரு கட்சிகளும் பெற்ற பலன்கள் குறித்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே விவாதம் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
3 நாட்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
3 நாட்கள் முன்பு
அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
3 நாட்கள் முன்பு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்