உடனடி செய்தி

கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு

கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
சென்னை: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், வங்கி வைப்பு நிதி, வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை 90 நாட்களுக்குள் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்த ரவிசங்கர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் பிற நிர்வாக விவரங்களை கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி, கோவில் நிர்வாகத்திற்கு பல்வேறு தகவல்களை வெளியிட உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், காலி மனைகள், வணிகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குத்தகைதாரர்கள் பற்றிய தகவல்கள், வாடகை நிலுவைத் தொகைகள், கோவிலின் வங்கி வைப்பு நிதி, சேமிப்புக் கணக்குகள் மற்றும் பக்தர்கள், உபயதாரர்கள் வழங்கிய நன்கொடைகள் தொடர்பான விவரங்களும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட வேண்டும். அர்ச்சகர்கள், நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களின் விவரங்கள், சேவை கட்டணங்கள், கோவிலின் வரவு-செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள் மற்றும் அறங்காவலர் குழு தீர்மானங்களையும் வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை பிறப்பித்த அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் உயரதிகாரிகளின் உத்தரவுகள் தொடர்பான தகவல்களையும் பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும். கோவில் நடை திறக்கும் நேரம், பூஜை நேரங்கள், திருவிழாக்கள், ஸ்தல வரலாறு உள்ளிட்ட மொத்தம் 11 வகையான தகவல்களை கோவில்கள் மற்றும் அலுவலகங்களில் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் அல்லது பதாகைகளில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும். உத்தரவு அமல்படுத்தப்பட்டதற்கான ஆவணங்களுடன், அறநிலையத் துறை கமிஷனர் அலுவலக பொதுத் தகவல் அலுவலரும் இணை ஆணையருமான தங்கம், நவம்பர் 30ம் தேதி மாநில தகவல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
4 மணி நேரங்கள் முன்பு
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
4 மணி நேரங்கள் முன்பு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
1 நாட்கள் முன்பு
தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்