உடனடி செய்தி

வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ

வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா: பூமி மற்றும் இயற்கை பேரிடர்களை தொடர்ந்து கண்காணிக்கும் திறன் கொண்ட இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோளை, ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 3:14 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஏவப்பட்ட ராக்கெட், 18 நிமிடங்கள் 34 வினாடிகள் பயணித்த நிலையில் தனது மூன்று நிலைகளையும் வெற்றிகரமாக கடந்து, இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோளை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் பிரித்து நிலைநிறுத்தியது. பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கி.மீ., உயரத்தில், 19.8 டிகிரி சாய்வுடன் அமைந்துள்ள சுற்றுப்பாதையில் இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. #### பேரிடர்களை கண்காணிக்கும் செயற்கைக்கோள் பூமியை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் இ.ஓ.எஸ்.-05 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பை துல்லியமாக படம்பிடித்து, முக்கிய தகவல்களை உடனுக்குடன் பூமிக்கு அனுப்பும் திறன் இந்த செயற்கைக்கோளுக்கு உள்ளது. வெள்ளம், புயல், மேகவெடிப்பு, இடி-மின்னல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை கண்காணித்து, முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இ.ஓ.எஸ்.-05 உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை சேகரிப்பதற்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும். #### 420.5 டன் எடையுள்ள ராக்கெட் இந்த ஏவுதலில் பயன்படுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும், 420.5 டன் எடையும் கொண்டது. இது இஸ்ரோவின் 19வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டின் மேல் நிலையில் அதிநவீன கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. பூமி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு முக்கிய பங்காற்றும் இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோளுக்கு இஸ்ரோ, 'வானத்தின் கண்' என்ற செல்லப்பெயரை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
4 மணி நேரங்கள் முன்பு
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
4 மணி நேரங்கள் முன்பு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
1 நாட்கள் முன்பு
தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்