உடனடி செய்தி

தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்

தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்
டில்லியில் நடைபெற்ற தேசிய நீர் துறை உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் நீர் பாதுகாப்பை வலுப்படுத்த நவீன தொழில்நுட்பங்களையும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு சார்ந்த மேலாண்மையையும் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். நீர் மேலாண்மை தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, அவற்றை முறையாக பகுப்பாய்வு செய்வது சிறந்த திட்டமிடலுக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார். தண்ணீரை சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை பரவலாக பயன்படுத்துவதோடு, உலக நாடுகளின் சிறந்த நீர் மேலாண்மை நடைமுறைகளிலிருந்தும் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். நீர் பாதுகாப்பை அரசு திட்டமாக மட்டும் பார்க்காமல், மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 'ஜல் உத்சவ்' போன்ற முயற்சிகளை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். முறையான திட்டமிடல், போதிய வளங்கள் மற்றும் திறமையான அதிகாரிகளுக்கு பொறுப்புகளை வழங்குவதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை கூட வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற முடியும் என அவர் தெரிவித்தார். விவசாயம் மற்றும் தொழில்துறைகளில் மறுசுழற்சி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்துவதற்கான முன்கூட்டிய திட்டமிடல் அவசியம் என்றும் வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையே அதிகாரிகள் மற்றும் விவசாயிகளின் பயணங்களை ஏற்பாடு செய்து, பிற மாநிலங்களின் சிறந்த நீர் மேலாண்மை முறைகளை நேரடியாக அறிந்து செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் எதிர்கால நீர் தேவைகளை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முன்கூட்டியே தயாராக வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
2 மணி நேரங்கள் முன்பு
மொபைல் கட்டணம் பக்தர்களுக்கு தண்டனையா?: ஹிந்து முன்னணி கேள்வி
மொபைல் கட்டணம் பக்தர்களுக்கு தண்டனையா?: ஹிந்து முன்னணி கேள்வி
2 மணி நேரங்கள் முன்பு
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
2 நாட்கள் முன்பு
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்