உடனடி செய்தி

நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு

நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெருக்கரணை கிராமத்தில் அமைந்துள்ள நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். சிறிய மலையின் மீது அமைந்துள்ள இக்கோவில், நடுபழனி தண்டாயுதபாணி தத்தாத்ரேய டிரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மைசூரைச் சேர்ந்த கணபதி சச்சிதானந்த சுவாமிகள் டிரஸ்ட் வழங்கிய 2.5 அடி உயர மரகத முருகர் சிலை, கடந்த 2008ல் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணிக்கு பிறகு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூன்று கதவுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கோவிலில் இருந்த 16 சிசிடிவி கேமராக்களின் இணைப்புகளை துண்டித்ததுடன், அபாய ஒலி எழுப்பும் பாதுகாப்பு கருவிகளையும் செயலிழக்கச் செய்துள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டிவிஆர் கருவியையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், இந்த திருட்டு சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தாமூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கினர். கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குற்றவாளிகளை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே சிலை திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தவர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மர்ம நபர்களை விரைவில் கைது செய்து, திருடப்பட்ட மரகத முருகர் சிலையை மீட்போம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்
2 மணி நேரங்கள் முன்பு
மொபைல் கட்டணம் பக்தர்களுக்கு தண்டனையா?: ஹிந்து முன்னணி கேள்வி
மொபைல் கட்டணம் பக்தர்களுக்கு தண்டனையா?: ஹிந்து முன்னணி கேள்வி
2 மணி நேரங்கள் முன்பு
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
2 நாட்கள் முன்பு
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்