நிலவின் மறுபுறத்தை எட்டிய வீரர்கள்: Artemis II புதிய சாதனை
நியூயார்க்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான NASA, தனது முக்கியமான Artemis II திட்டத்தின் மூலம் மனிதர்களை நிலவின் அருகில் அனுப்பி புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற விண்கலம், புளோரிடாவில் உள்ள Kennedy Space Center-இலிருந்து வெற்றிகரமாக புறப்பட்டது.
இந்த விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து அதன் மேற்பரப்பை மிக நெருக்கமாகச் சுற்றி ஆய்வு செய்தது. இந்த பயணத்தின் போது, மனித வரலாற்றில் இதுவரை எட்டப்படாத அதிகபட்ச தூரத்தை விண்வெளி வீரர்கள் எட்டினர்.
நிலவுக்கு சுமார் 6,545 கிலோமீட்டர் தூரத்தில் சென்ற அவர்கள், இதுவரை மனிதக் கண்களுக்கு தெரியாத புதிய கோணங்களில் புகைப்படங்களை பதிவு செய்து பூமிக்கு அனுப்பினர்.
மேலும், பூமியிலிருந்து சுமார் 4,06,778 கிலோமீட்டர் தூரத்தை அடைந்து, Apollo 13 திட்டத்தின் சாதனையை முறியடித்தனர்.
விண்கலம் நிலவின் மறுபுறம் சென்றபோது, பூமியுடன் இருந்த தொடர்பு சுமார் 42 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த நேரம் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த பதட்டமான தருணமாக இருந்தது.
அந்த இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்பு கிடைத்தது, இது வெற்றிகரமான பயணத்தின் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
வீரர்கள் நிலவைச் சுற்றி சுமார் 7 மணி நேரம் ஆய்வு செய்து, இரண்டு புதிய பிரகாசமான பள்ளங்களை கண்டறிந்து அவற்றிற்கு பெயர் சூட்டினர்.
மேலும், நிலவின் பின்னால் இருந்து சூரிய உதய காட்சியையும், நிலவு சூரியனை மறைக்கும் அரிய கிரகண காட்சியையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த சாதனை, மனித குலத்தின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
நேபாள வெள்ளத்தில் 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
8 மணி நேரங்கள் முன்பு
நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளம்: 392 பேர் பலி; 1,500 பேர் மாயம் – 57 தமிழர்களின் நிலை கவலைக்கிடம்
8 மணி நேரங்கள் முன்பு
உரிமம் இல்லாத உணவுக்கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம்: போதைப்பொருள் விற்றால் கடைக்கு 'சீல்'
2 நாட்கள் முன்பு
மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்