உடனடி செய்தி

ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டுகளில் இந்தியா களமிறங்க வேண்டும்: பிரதமர் மோடி

ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டுகளில் இந்தியா களமிறங்க வேண்டும்: பிரதமர் மோடி
புதுடில்லி: ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க, தற்போது பங்கேற்காத பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் களமிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட 'கேலோ இந்தியா' உரையாடல் நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வதற்கான முயற்சி மட்டுமல்ல; நாட்டை வலுப்படுத்தும் முக்கியமான ஒரு பகுதியாகும் என்றார். ஒலிம்பிக்கில் இடம்பெறும் பல்வேறு விளையாட்டுகளில் இந்தியா இன்னும் முழுமையாக பங்கேற்கவில்லை. கடந்த 2012ம் ஆண்டில் 13 விளையாட்டுகளில் மட்டுமே இந்தியா பங்கேற்றதாகவும், 2024ல் 32 விளையாட்டுகளில் 16ல் மட்டுமே களமிறங்கியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு நீண்ட கடற்கரை, மலைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு புவியியல் வளங்கள் உள்ளன. இதனால் சர்பிங், ஸ்போர்ட் கிளிம்பிங், நீர்விளையாட்டுகள் மற்றும் குளிர்கால விளையாட்டுகள் உள்ளிட்ட பல துறைகளில் திறமைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். உலக அளவில் பதக்கங்கள் கிடைக்கும் பல போட்டிகளில் இந்தியா பங்கேற்காத நிலையை மாற்ற வேண்டும். அதிக விளையாட்டுகளில் வீரர்களை உருவாக்கி, ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் அபாரம்: இந்திய பவுலர்களின் பிடியில் இலங்கை
பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் அபாரம்: இந்திய பவுலர்களின் பிடியில் இலங்கை
1 நாட்கள் முன்பு
துருவ் ஜுரல் அபார சதம்: கொழும்பு டெஸ்டில் இந்தியா 503 ரன்கள் குவிப்பு
துருவ் ஜுரல் அபார சதம்: கொழும்பு டெஸ்டில் இந்தியா 503 ரன்கள் குவிப்பு
3 நாட்கள் முன்பு
உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவின் காஜல் தங்கம் வென்று அசத்தல்
உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவின் காஜல் தங்கம் வென்று அசத்தல்
6 நாட்கள் முன்பு
இங்கிலாந்தை கோலின்றி தடுத்த இந்தியா; உலக கோப்பை ஹாக்கியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
இங்கிலாந்தை கோலின்றி தடுத்த இந்தியா; உலக கோப்பை ஹாக்கியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
21 Aug 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்