உடனடி செய்தி

மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து

மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
சென்னை: மிலாது நபி பண்டிகையையொட்டி, முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், மிலாது நபி நன்னாள் அனைவரது வாழ்விலும் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். இரக்கம் மற்றும் சமூக நலனுக்கான எண்ணம் அனைவரையும் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார். தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்தில், இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயம் நிறைந்த மிலாது நபி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மனிதர்கள் மீது அன்பு, ஏழை எளியோர் மீது இரக்கம், அனைவரிடமும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளைப் பின்பற்றி, சமூகத்தில் அன்பும் நல்லிணக்கமும் வளர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மிலாது நபி நன்னாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, நலம் மற்றும் வளம் பெருகட்டும் என்றும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி: நாசிக்கில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள்
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி: நாசிக்கில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள்
20 மணி நேரங்கள் முன்பு
கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தி.மு.க., 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தி.மு.க., 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 நாட்கள் முன்பு
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
4 நாட்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்