உடனடி செய்தி

உரிமம் இல்லாத உணவுக்கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம்: போதைப்பொருள் விற்றால் கடைக்கு 'சீல்'

உரிமம் இல்லாத உணவுக்கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம்: போதைப்பொருள் விற்றால் கடைக்கு 'சீல்'
சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உணவகங்கள் மற்றும் உணவுக்கடைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து 391 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வாரத்தில் இரு நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, உணவுக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறாத உணவுக்கடைகளுக்கு முதலில் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும். அதன்பிறகும் உரிமம் பெறாமல் செயல்பட்டால், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்ச அபராதம் ரூ.5 ஆயிரமாக இருந்தது. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தால் விதிக்கப்படும் அபராதமும் ரூ.1,000-ல் இருந்து ரூ.10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விதிக்கப்படும் அபராதத்தை 3 நாட்களுக்குள் கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் உணவுக்கடைகளுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரம், இரண்டாவது முறை ரூ.50 ஆயிரம், மூன்றாவது முறை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், கடைக்கு 3 மாதங்கள் வரை 'சீல்' வைக்கப்படும். மூன்று முறைக்கு மேல் போதைப்பொருள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்த கடையின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
3 மணி நேரங்கள் முன்பு
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி: நாசிக்கில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள்
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி: நாசிக்கில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள்
21 மணி நேரங்கள் முன்பு
கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தி.மு.க., 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தி.மு.க., 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 நாட்கள் முன்பு
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்