உடனடி செய்தி

பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் எச்சரிக்கை: ஆப்கானிஸ்தானுக்கு பாக் ராணுவ தளபதி அறிவிப்பு

பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் எச்சரிக்கை: ஆப்கானிஸ்தானுக்கு பாக் ராணுவ தளபதி அறிவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத செயல்பாடுகள் நடைபெறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார். தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், ராவல்பிண்டியில் ஷியா மதகுருமார்களை சந்தித்த பின் பேசிய அசிம் முனீர், “கஜப் லில் ஹக்” என்ற பெயரில் தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிப்போம் என உறுதியளித்தார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்புகளை முற்றிலும் அழிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் வேண்டுகோளின் பேரில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்