பெண் கமிஷனரின் அண்டர்கவர் ஆப்பரேஷன்: நள்ளிரவில் பெண்களை தொந்தரவு செய்த 40 பேர் சிக்கினர்
ஹைதராபாத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலையை நேரடியாக ஆய்வு செய்ய தெலுங்கானா போலீசார் அதிரடி அண்டர்கவர் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்காக மல்கஜ்கிரி போலீஸ் கமிஷனர் சுமதி, சாதாரண பெண்ணைப் போல நள்ளிரவில் பஸ் நிறுத்தத்தில் தனியாக நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
தில்சுக் நகர் பகுதியில் நடைபெற்ற இந்த ரகசிய ஆப்பரேஷனின் போது, பல ஆண்கள் கமிஷனரை அணுகி கேலி செய்தல், ஆபாசமாக பேசுதல் மற்றும் வாகனத்தில் வருமாறு வற்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இரவு 12:30 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை நடந்த கண்காணிப்பில், சுமார் 40 பேர் பெண்களை தொந்தரவு செய்ய முயன்றது பதிவாகியுள்ளது.
முன்கூட்டியே பதுங்கியிருந்த போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட அனைவரையும் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் பலர் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் இதில் ஈடுபட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் இரவு நேரங்களில் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்களை புரிந்து கொள்ளவும், பாதுகாப்பற்ற பகுதிகளை அடையாளம் காணவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைக்கு பெண்கள் மத்தியில் பாராட்டு அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்