பி.சி.சி.ஐ. நமன் விருது 2026: சிறந்த வீரராக சுப்மன் கில், சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு
புதுடில்லியில் நடைபெற்ற பி.சி.சி.ஐ. நமன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளங்கிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சிறந்த ஆண் வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. இவர் 2023க்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அவர் விளையாடிய 35 சர்வதேச போட்டிகளில் 7 சதம் மற்றும் 3 அரைசதம் அடித்து மொத்தம் 1764 ரன்கள் குவித்துள்ளார்.
சிறந்த பெண் வீராங்கனைக்கான விருதை இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா ஐந்தாவது முறையாக வென்றார். கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் அவர் 1703 ரன்கள் எடுத்தார். அதில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 1362 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சீசனில் 1000 ரன்களை கடந்த முதல் பெண்கள் ஒருநாள் வீராங்கனையாகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.
மேலும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முன்னாள் இந்திய வீரர்கள் ராகுல் டிராவிட், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் மிதாலி ராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்