உடனடி செய்தி

பி.சி.சி.ஐ. ‘நமன்’ விருது விழா: உலக கோப்பை வென்ற இந்திய அணிகளுக்கு பாராட்டு

பி.சி.சி.ஐ. ‘நமன்’ விருது விழா: உலக கோப்பை வென்ற இந்திய அணிகளுக்கு பாராட்டு
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆண்டுதோறும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ‘நமன்’ விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ‘நமன்’ விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கடந்த ஆண்டில் சிறப்பாக விளங்கிய வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருதைப் பெறுகிறார். இந்திய பெண்கள் அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சிறந்த வீராங்கனைக்கான விருதை ஐந்தாவது முறையாக பெறுகிறார். மேலும், முன்னாள் இந்திய வீரர்கள் ராகுல் டிராவிட், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் முன்னாள் இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோருக்கு ‘சி.கே. நாயுடு’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இதற்கிடையில், சமீபத்தில் டி-20 உலக கோப்பையை கைப்பற்றிய சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியினருக்கு சிறப்பு பாராட்டு வழங்கப்படுகிறது. அதேபோல் கடந்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஆண்கள் அணிகளும் கௌரவிக்கப்படுகின்றன. மேலும், 19 வயதுக்கு உட்பட்ட டி-20 உலக கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி மற்றும் சமீபத்தில் 19 வயதுக்கு உட்பட்ட 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய ஆண்கள் அணிகளுக்கும் இந்த நிகழ்ச்சியில் பாராட்டு வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப் அதிரடி சாதனை: 265 ரன் சேஸ் செய்து வரலாற்று வெற்றி
பஞ்சாப் அதிரடி சாதனை: 265 ரன் சேஸ் செய்து வரலாற்று வெற்றி
3 நாட்கள் முன்பு
சஞ்சு சாம்சன் சதம் – சென்னை அணி அதிரடி வெற்றி; மும்பை சரிவு
சஞ்சு சாம்சன் சதம் – சென்னை அணி அதிரடி வெற்றி; மும்பை சரிவு
5 நாட்கள் முன்பு
ராஜஸ்தான் அதிரடி: லக்னோவை 40 ரன்களில் வீழ்த்தி 5வது வெற்றி
ராஜஸ்தான் அதிரடி: லக்னோவை 40 ரன்களில் வீழ்த்தி 5வது வெற்றி
6 நாட்கள் முன்பு
டில்லி சரிவு: அபிஷேக் சூறாவளியில் ஐதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
டில்லி சரிவு: அபிஷேக் சூறாவளியில் ஐதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
22 Apr 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்