பீதி தேவையில்லை: பெட்ரோல், டீசல் போதுமான கையிருப்பில் – மத்திய அரசு உறுதி
புதுடில்லி: நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை ஏற்படும் என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், சமீபத்தில் சில பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை இருப்பதாக வதந்திகள் பரவி, மக்கள் பீதியுடன் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும், சுத்திகரிப்பு ஆலைகள் முழு திறனுடன் செயல்பட்டு வருகின்றன. உள்நாட்டு எல்பிஜி (LPG) உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எரிபொருள் விற்பனை நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், எந்தவித பற்றாக்குறையும் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
அதனால் மக்கள் தேவையற்ற பீதியடையாமல், வழக்கமான முறையில் எரிபொருள் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், குழாய்வழி எரிவாயு (PNG) இணைப்புகளை கல்வி நிறுவனங்கள், விடுதிகள் மற்றும் அங்கன்வாடி சமையலறைகளுக்கு விரைவாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 5 நாட்களில் இவ்விணைப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கையகப்படுத்திய நிலம் பழநி கோயிலுக்கே மாற்றப்படும்; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
13 மணி நேரங்கள் முன்பு
பதவியேற்பு விதிமீறல்: 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவியேற்பை ரத்து செய்த கேரள ஐகோர்ட்
13 மணி நேரங்கள் முன்பு
ஹார்முஸ் ஜலசந்தி சீரடைந்ததால் கச்சா எண்ணெய் விலை சரிவு; 4 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
13 மணி நேரங்கள் முன்பு
‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்