உடனடி செய்தி

பிரெஞ்ச் ஓபன் 2026: சினியாகோவா - டவுன்சென்ட் ஜோடி பெண்கள் இரட்டையர் சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் 2026: சினியாகோவா - டவுன்சென்ட் ஜோடி பெண்கள் இரட்டையர் சாம்பியன்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் கதரினா சினியாகோவா மற்றும் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் அனா டேனிலினா மற்றும் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ரூனிக் ஜோடியை எதிர்கொண்ட சினியாகோவா - டவுன்சென்ட் கூட்டணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் நீடித்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்த ஜோடி, பிரெஞ்ச் ஓபன் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றி கதரினா சினியாகோவாவின் நான்காவது பிரெஞ்ச் ஓபன் பெண்கள் இரட்டையர் பட்டமாகும். மேலும், அவரது கிராண்ட்ஸ்லாம் பெண்கள் இரட்டையர் பிரிவில் 11வது சாம்பியன் பட்டமாகவும் அமைந்தது. இதன் மூலம் மகளிர் இரட்டையர் டென்னிஸில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளார். டெய்லர் டவுன்சென்டுக்கு இது முதல் பிரெஞ்ச் ஓபன் பெண்கள் இரட்டையர் பட்டமாகும். அதேசமயம் அவரது டென்னிஸ் வாழ்க்கையின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
2 மணி நேரங்கள் முன்பு
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
2 நாட்கள் முன்பு
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
3 நாட்கள் முன்பு
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்