உடனடி செய்தி
விளையாட்டு ⚡ உடனடி செய்தி

பிரெஞ்ச் ஓபன் 2026: முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்

பிரெஞ்ச் ஓபன் 2026: முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். இறுதிப்போட்டியில் இத்தாலியின் பிளாவியோ கோபோலியை எதிர்கொண்ட உலகின் 3-வது நிலை வீரரான ஸ்வெரேவ், கடும் போராட்டத்திற்குப் பிறகு வெற்றி பெற்றார். முதல் செட்டை எளிதாக கைப்பற்றிய அவர், பின்னர் கோபோலியின் சவாலை எதிர்கொண்டார். ஐந்து செட்கள் வரை நீண்ட பரபரப்பான ஆட்டத்தில் ஸ்வெரேவ் 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தட்டிச் சென்றார். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கியது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இதற்கு முன்பு மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த ஸ்வெரேவ், இந்த முறை தனது கனவை நனவாக்கி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஏடிபி ஒற்றையர் பிரிவில் தனது 25வது பட்டத்தையும் ஸ்வெரேவ் கைப்பற்றியுள்ளார். மறுபுறம், சிறப்பாக விளையாடிய பிளாவியோ கோபோலி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியிலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்து கவனம் ஈர்த்தார்.

தொடர்புடைய செய்திகள்

வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; ஜிம்பாப்வேயை வீழ்த்தி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா
வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; ஜிம்பாப்வேயை வீழ்த்தி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா
7 மணி நேரங்கள் முன்பு
பழனி மட நில ஆக்கிரமிப்பு வழக்கு: மின், குடிநீர் இணைப்பு ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி
பழனி மட நில ஆக்கிரமிப்பு வழக்கு: மின், குடிநீர் இணைப்பு ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி
1 நாட்கள் முன்பு
ஜிம்பாப்வேயை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா; இஷான் கிஷான், திலக் வர்மா அபார அரைசதம்
ஜிம்பாப்வேயை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா; இஷான் கிஷான், திலக் வர்மா அபார அரைசதம்
1 நாட்கள் முன்பு
2வது டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?
2வது டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்